மதுரை
திமுக பிரமுகர் உரவினர் காளீஸ்வரன் கொலை வழக்கில் கைதான ரவுடி என்கவுண்டரில் இறந்தது குறித்து காவல்துறை ஆணையர் விளக்கம் அளிக்துள்ளார்.
திமுக பிரமுகரின் உறவினர் காளீஸ்வரன் கொல்லப்பட்ட வழக்கில்ந் கைது செய்யப்பட ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் மதுரையில் / நேற்று இரவு போலீசாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு காவல்துறை ஆணையர் லோகநாதன் சென்றார்.
பி/றகு அவர் செய்தியாளர்களிடம்,
”சுபாஷ் சந்திரபோசுக்கு காளீஸ்வரன் கொலை வழக்கு மற்றும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்பு இருக்கிறது. இந்த நிலையில் அவரை கைது செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடும் போது துப்பாக்கி வைத்து போலீஸ் இன்ஸ்பெக்டரை சுட முயன்றுள்ளார்.
இதனால் பாதுகாப்பு கருதி சுட்டதில் சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்துள்ளார்.மேலும், மதுரை மாநகர் பகுதியில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடிய நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’
‘. என்று விளக்கம் அளித்துள்ளார்.