சென்னை,
அதிமுக எம்எல்ஏ மதுரை சரவணன் கொடுத்துள்ள புகாரையடுத்து, சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மீது ஆள்கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் காரணமாக அதிமுகவின் பெரும்பாலான எம்எல்ஏக்களை சசிகலா தரப்பினர் கேல்டன் பே ரிசார்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கு தங்கி யுள்ள எம்எல்ஏக்கள் எந்தவித வெளித்தொடர்புமின்றி பயத்தோடு நாட்களை கடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், அங்கிருந்து மாறுவேடம் தரித்து தப்பி வந்த மதுரைமேற்கு தொகுதி எம்எல்ஏவான சரவணன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை, சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்கள் கடத்தி வைத்துள்ள தாக புகார் மனு கொடுத்துள்ளார்.
அதில், கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் 3 பேர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூவத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில், சசிலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது ஆள்கடத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சசிகலா சிறைக்கு செல்வதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி தன்னை முதல்வராக பதவி ஏற்க அழைப்புகோரி கவர்னரிடம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் அளித்துள்ள நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.