திருவனந்தபுரம்

மொபைலில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டினால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வாகனம் ஓடுபவர்கள் மொபைலில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் கவனக்குறைவால் பல விபத்துக்கள் நிகழ்கின்றன.   மொபைலில் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  இந்த வழக்கம் நாடெங்கும் நடைபெற்று வருகிறது.

கேரளாமாநில கொச்சியை சேர்ந்த சந்தோஷ் என்பவர் சில தினங்களுக்கு முன்பு மொபைலில் பேசியபடி காரை ஓட்டி உள்ளார்.   இதனால் கேரள காவல்துறையினர் இவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.  சந்தோஷ் இது தவறானது எனக் கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் காவல்துறை மீது வழக்கு தொடர்ந்தார்.

சந்தோஷ் தனது வழக்கு மனுவில், “மொபைலில் பேசியவாறு வாகனம் ஓட்டுவது சட்ட விரோதம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.   ஆனால் இது போல சட்டத்தில் இல்லை.   எனவே காவல்துறையினர் என் மீது போட்ட வழக்கு சட்ட விரோதமானது.   ஆகவே அதை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

கேரள நீதிமன்றம், “மொபைலில் பேசியபடி வாகனத்தை ஓட்டுவதனால் பொதுமக்களுக்கு அபாயம் ஏற்படும் என்னும் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்    ஆனால் மொபைலில் பேசியபடி வாகனம் ஓட்டும் ஒருவர் பொதுமக்களுக்கு அபாயத்தை உண்டாக்குவார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.   எனவே இவ்வாறு வழக்கு பதிவு செய்யக் கூடாது” என தீர்ப்பளித்துள்ளது.

[youtube-feed feed=1]