.

மும்பை

பிஎல் 2018 போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வென்றது.

நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதின.   டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.   பேட்டிங்கில் களம் இறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழந்து 186 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்ததாக விளையாடிய பஞ்சாப் அணிக்கு 187 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணையிக்கப் பட்டது.   இந்த அணி நன்கு விளையாடிய போதிலும் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 183 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.   மும்பை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.