சென்னை: சாகசத்திற்காக படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பள்ளி நாட்களிள்ல பெரும்பாலாம், காலை, மாலை நேரங்களில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், ஆவடியில் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு, ஜன்னல் மீது ஏறிக்கொண்டும் பயணம் செய்வது வாடிக்கையாக உள்ளது. இதனால், சில நேரங்களில் விபத்து ஏற்பட்டு மாணவர்கள் உயிரிழக்கும் நேரிடுகிறது. அதனால் பேருந்துகளில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு செல்லக்கூடாது என காவல்துறை, பள்ளிகள் தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் மாணவர்களின் சாகச பயணம் தொடர்கிறது.
இதற்கு காரணமா, பள்ளி, கல்லூரி நேரத்தில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதே காரணம் என்று மாணவர்கள் தரப்பு மற்றும் சமூக ஆர்வலர்களும் அரசை குற்றம் சாட்டுகின்றனர். போதுமான பேருந்துகளை கூட்டம் நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும், அதனால் மாணவர்கள் தொங்கிக்கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி வருகின்றனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, சாகசத்திற்காக படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என கூறியதுடன், பிள்ளைகளை பெற்றோர்கள் முறையாக வளர்க்க வேண்டும், அதற்கான பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது என்பதையும் சுட்டிகாட்டிது.
மேலும் பேருந்துகளில், ஓட்டுநர், நடத்துனர் அறிவுறுத்தல்களை ‘ஏற்காமல் மாணவர்கள் சாகசம் என நினைத்து பேருந்து படிக்கட்டுகளில் பயணிக்கின்றனர். பேருந்து படிக்கட்டுகளில் பயணிக்கும் மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யலாம் என்றும், படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை செய்த நீதிபதிகள், படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுகின்றன. *பள்ளியிலேயே புகைப்பழக்கம், மது, புகையிலை, கஞ்சா பழக்கங்கள் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது மாணவியர் பள்ளிகளில் காவல்துறை பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு நிலைமை உள்ளது
சென்னையில் அரசு பேருந்துகளின் மேற்கூரையில் மாணவர்கள் பயணிப்பதை காண முடிகிறது. பேருந்துகளின் உள்ளே போதிய இடம் இருந்தும், பள்ளி மாணவர்கள் தான் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர். மாணவர்கள் பேருந்துக்குள் இருப்பதை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். *பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதை உறுதி செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
பேருந்துகளின் படிக்கட்டுகளில் பயணம் செய்வது மோட்டார் வாகன விதியின் படி தண்டனைக்குரிய குற்றம். பயணத்தின் போது மாணவர்கள் பேருந்திற்குள் இருப்பதை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.