சென்னை:
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அதை பலர் மதிக்காமல் வாகனங்கள் செல்லும்போது, சில இடங்களில் காவல்துறையினரின் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதுதொடர்பாக மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்க, அதுவும், கொரோனா பரவல் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்பு, இறப்பு குறித்தும், சட்டத்தை மீறுவோர் குறித்தும் கவலைப்படாமல், டிஜிபி பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் வெளியில் வருவதைத் தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிவோரை தடுக்கும் காவலர்களிடம் பலர் வாக்குவாதம் செய்வதால், அவர்களிடம் காவல்துறையினர் சற்று கடுமையாக நடந்துகொண்ட சம்பவங்களும் நடைபெற்றது. காவல்துறையினரின் எகிறிய கொருக்குப்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு மாவு கட்டு போடப்பட்டது. மேலு பல இடங்களில் வாகனங்களோடு சேர்த்து வாகன ஓட்டிகளுக்கும் சரமாரியாக அடிகள் விழுந்தது.
சமீப காலமாக, ஊரடங்கை மீறி செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் கடுமை காட்டிய காவல்துறை, உயர் அதிகாரிகள் உத்தரவால் தற்போதுகடுமை காட்டுவதில்லை. இதனால் ஏராளமானோர் வாகனங்களில் சுற்றுவதும் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது.
ஆனால், வேலைவெட்டியில்லாத சட்டம் படிக்கும் மாணவர் ஒருவர், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், ஊரடங்கை மீறுவோர் மீது கடுமையாக நடந்து கொள்ளும் காவலர்கள் தொடர்பாக புகார் அளிக்க, தகுந்த வசதியை ஏற்படுத்தித் தர உத்தரவிடக் கோரியுள்ளார்.
இந்தப் புகார் மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையத் தலைவர் துரை ஜெயச்சந்திரன், இதுகுறித்து 4 வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஒரு நாட்டின் அரசு அவசர காரணத்திற்காக ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தும்போது, அதை கடைபிடிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. ஆனால், அதை மதிக்காமல் செல்பவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தால், அவர்களிடம் வாக்குவாதம் நடத்துவதும், சட்டத்தை மதிக்காமல் நடந்துகொள்வதும் நமது நாட்டில்தான் அதிகம்.
அரசின் உத்தரவை மதிக்க உத்தரவிடாத பல நீதித்துறை அமைப்புகள், சட்டத்தை மீறுவோர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் வகையில் பஞ்சாயத்து செய்துகிறது. அதுபோன்ற ஒரு செயலைத்தான் மாநில மனித உரிமைக்கழகமும் செய்து வருகிறது…
முதலில் சட்டத்தை மீறியவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கிவிட்டு பின்னர், இதுபோன்ற பஞ்சாயத்துக்களை நடத்தலாம் மனித உரிமைக்கழகம்.