கடலூர்:  என்எல்சிக்கு எதிரான இன்று கடலூரில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என பாமக அறிவித்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும்  போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான பாமகவினரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில்,  மக்கள் நடமாட்டம் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.

என்எல்சி நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து கடலூரில்  இன்று பாமக சார்பாக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று போராட்டத்தைத் தொடர்ந்து, நேற்று இரவு முன்கூட்டியே பேருந்துசேவைகள் முடங்கின.  இன்று காலை அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வரும் நிலையில், தனியார் பேருந்து சேவைகள் முடங்கி உள்ளது. சில இடங்களில் மட்டும் ஒருசில தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. முழு அடைப்பு போராட்டத்தைத் தொடர்ந்து. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பிற்காக 7,000 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையில் முன்னெச்சரிக்கையாக முக்கிய பாமக பிரமுகர்கள் 55 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வளியாகி உள்ளது.

இதற்கிடையில், கடலூர் மாவட்டம்  சிதம்பரத்தில் கடையடைப்பு இல்லை வர்த்தகர் சங்கம் அறிவித்து உள்ளது. ஆனால், பல இடங்களில் கடைகள் திறக்கப்பட வில்லை என்றும், பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்படுவதாக கூறப்படுகிறது.

கடலூர்  மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. கடலூரில் இன்று வழக்கம்போல் கடைகள் இயங்கும் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் கூறி உள்ளார்.