போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி! ஐகோர்ட்டு விசாரணை
சென்னை,
சென்னையில் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்த இளைஞர்கள் மீது தடியடி நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.
சென்னையில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் கலைந்து செல்ல அவகாசம் வழங்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சிலர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு முன் இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்துவதை நிறுத்த வேண்டும்; காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
அப்போது தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ஆதாரங்கள் இல்லாமல், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என கூறி விட்டது.
இதையடுத்து, வழக்கறிஞர் சங்கர்சுப்பு தனி நீதிபதி மகாதேவன் முன் இப்பிரச்னையை கொண்டு சென்றார். இந்த விவகாரத்தை அவசர வழக்காக ஏற்று, மதியம் விசாரிக்க நீதிபதி ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கு, அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது
[youtube-feed feed=1]