லண்டன்: உலகக்கோப்பை புள்ளிப் பட்டியலில், ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடம் வகிக்க, இங்கிலாந்து அணி மூன்றாமிடத்திற்கு சென்றுவிட்டது. அதேசமயம், இங்கிலாந்து அணியை ஆச்சர்யகரமான முறையில் வென்றதன் மூலம், புள்ளிப் பட்டியலில் 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது இலங்கை அணி.

ஜுன் 21ம் தேதி வரையான விபரப் பட்டியல்:

ஆஸ்திரேலிய அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து அணி 9 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், இங்கிலாந்து அணி 8 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும், 4 ஆட்டங்கள் மட்டுமே ஆடியுள்ள இந்திய அணி 7 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும் இருந்து வருகின்றன.

இலங்கை 6 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், வங்கதேசம் 5 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் 3 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 3 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், பாகிஸ்தான் 3 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், ஆஃப்கானிஸ்தான் புள்ளிகள் எதுவும் பெறாமல் பத்தாவது இடத்திலும் உள்ளன.

இலங்கை பெற்றுள்ள 6 புள்ளிகளில், 2 புள்ளிகள் இலவசப் புள்ளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. பாவம், இலங்கைக்கு 2 இலவசப் புள்ளிகள் கிடைத்த நிலையில், ஆஃப்கானிஸ்தானுக்கு 1 இலவசப் புள்ளிகூட கிடைக்கவில்லை என்பதுதான் கொடுமை.

இன்னும் மீதமுள்ள ஆட்டங்கள் நடக்க நடக்க, புள்ளிப் பட்டியலில், குறிப்பாக முதல் 4 இடங்களுக்குள் சில மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா இன்னும் சில போட்டிகளை ஆடும் பட்சத்தில், முதலிடத்தை நோக்கி நகரும் என்றும் நம்பப்படுகிறது.