டெல்லி: வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதியில்லை என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதற்கு காரணமாக, முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான  காங்கிரஸ் அரசின் விளக்கத்தை மேற்கோள் காட்டி உள்ளது. இந்தவிவரத்தை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம், வயநாடு பகுதியில் பெருமழை காரணமாக கடந்த ஜூலை  30-ம் தேதி அதிகாலை நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதன்காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்றும் 12-வது நாளாக நேற்று மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலச்சிரிவில்சிக்கி இதுவரை 427 பேர் உயிரிழந்துள்ளனர். 273 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  மேலும் 138 பேரை காணவில்லை. ஏராளறமான வீடுகள் உடைந்து நொறுங்கி போயுள்ளது.

.இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வயநாடு சென்றுள்ளார். அங்கு ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்.  இதனிடையே வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள்  தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இநத் நிலையில்,  வயநாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடரை, தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது கடந்த 2013ம் ஆண்டு அப்போதை பிரதமர் மன்மோகன் சிங், இயற்கை பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என விளக்கமளித்திருந்தார். இந்த விளக்கத்தை மேற்கோள்காட்டி, தற்போது வயநாடு நிலச்சரிவையும் இயற்கை பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதியில்லை என்றும் தேசிய பேரிடராக அறிவிக்க விதியில்லை என 2013ல் மன்மோகன் அரசே தெளிவுபடுத்தியது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது

[youtube-feed feed=1]