சென்னை:

ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் இல்லத்தில் வருமானவரி சோதனை நடந்துகொண்டிருப்பதை அடுத்து அந்த பகுதி காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

வி.கே. சசிகலா குடும்பத்தைக் குறிவைத்து வருமானவரித்துறையினர் பிரம்மாண்ட சோதனை நடத்தினர். அப்போது கிடைத்த சில தகவல்களை அடிப்படையாக்கக் கொண்டு, ஜெயலலிதா வாழந்த சென்னை போயஸ் இல்லத்தில் ( வேதா இல்லம்) தற்போது வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. மூன்று பேர் கொண்ட வருமானவரி அதிகாரிகள் குழு இந்த சோதனையை நடத்தி வருகிறது.

தற்போது, முதல் தளத்தில  உள்ள ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் அறையில் சோதனை நடந்துவருகிறது.

ஜெயலலிதா வாழந்த இந்த  வேதா இல்லம் ஜெயலலிதாவின் நினைவிடம்  ஆக்கப்பட்டு, அது அரசுடமை ஆக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.

சோதனை நடைபெறுவதால் வேதா இல்லத்திற்கு 200 மீட்டருக்கு முன்பாகவே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏராளமான காவலர்கள் (ரிசர்வ் போலீசார்) குவிக்கப்பட்டுள்ளனர். ஜெயலிலதா இல்லத்தை காவல்துறை சுற்றிவளைத்துள்ளது என்றே கூறும் அளவுக்கு காவல்துறையின் அப்பகுதி முழுதும் நிறைந்திருக்கின்றனர்.