இஸ்லாமாபாத்:
ரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்த மறுநாளே சம்பள உயர்வை பாகிஸ்தான் அரசு ரத்து செய்துள்ளது.

பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆற்றிய நாடாளுமன்றத்தின் முதல் உரையில் அரசுப் பணியாளர்ர்களின் ஊதியங்கள், ஓய்வூதியங்களை உயர்த்துவதாக அறிவித்தார்.

ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.25,000 ஆகவும், ஓய்வு பெற்ற பாகிஸ்தான் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 10 சதவீதம் உயர்த்தப்படும் என்று ஷெரீப் அறிவித்திருந்தார். அதோடு, 1 லட்சத்துக்கும் குறைவான ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் சம்பளம் உயர்த்தப்படும் என்றும் தனது முதல் உறுதியை அவர் அளித்தார்.

பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் அறிவிப்புக்கு அடுத்த நாளே, இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்ட நிலையில், அரசு ஊழியர்களின் சம்பளத்தை மீண்டும் உயர்த்தவில்லை என்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) மூத்த தலைவர் மிஃப்தா இஸ்மாயில் தெரிவித்தார்.