சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை மார்ச் 5ந்தேதி வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கூட்டணி, தொகுதி பங்கீடு காண்பதில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு, சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை மார்ச் 5 ஆம் தேதி வெள்ளிக் கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
‘பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.