சென்னை: முதல்வர் ஸ்டாலினுடன் பாமக இளைஞர்அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீரென தனது கட்சி எம்எல்ஏக்களுடன் சென்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து ஆய்வு செய்து மீண்டும் சமூக நீதி நிலைநாட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

இநத் நிலையில்,  சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். அப்போது முதல்வருக்கு சால்வை அணிவித்த அன்புமணி வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு  அவரிடம் சில நிமிடங்கள் பேசினார்.  இச்சந்திப்பில் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்பட கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியளார்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், முதல்வருடன் நடந்த சந்திப்பு நல்ல சந்திப்பாக அமைந்தது. மீண்டும் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம்.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பில், மாநில அரசுக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது என்றும், உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்றும், சாதகமான அம்சங்களை கூறியுள்ளது என்பதையும் முதல்வரிடம் விளக்கமாக சென்னோம். வன்னியர் இட ஒதுக்கீட்டில் புள்ளிவிவரம் தான் சிக்கலாக இருக்கிறது.. புள்ளி விவரம் நம்மிடம் இருக்கிறது அதனை சேகரித்து சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். முதல்வர்,  தேவையான தரவுகளை திரட்டி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என்று தெரிவித்தார்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு எல்லாம் இருக்கிறது ஆனால் வன்னியர்களுக்கு இல்லை. வன்னியர் இட ஒதுக்கீடு யாருக்கும் பாதகமான இட ஒதுக்கீடு கிடையாது என்று கூறிய அன்புமணி, திமுக மீது அதிமுக  வைத்த குற்றச்சாட்டுகளுக்குள்ளே நாங்கள் போக விரும்பவில்லை. இது சமூக நீதி பிரச்சனை. இருக்கிற புள்ளிவிவரங்களை சேகரிக்க வேண்டும். அரசு நினைத்தால் ஒரு வார காலத்தில் இந்த புள்ளிவிவரங்களை சேகரிக்க முடியும். மூத்த வழக்கறிஞர்களை கொண்டு தமிழக அரசு நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தில் வாதாடியது. நல்ல வகையில் இந்த அரசு சட்ட பிரச்சனையை கையாண்டது என்று தெரிவித்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுத்த கடிதத்தை முதலமைச்சரிடம் கொடுத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று அதிமுக 10.5% இடஒதுக்கீடு கொண்டு வந்தது, அதை திமுக உறுதி செய்தது. இதில் அனைத்து கட்சிகளும் ஒரே நிலையில் இருக்க வேண்டும்” என கூறியவர்,  வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக  இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே சட்டத்திருத்தம் மீண்டும் கொண்டு வரலாம் என்றவர்,   வன்னியர் இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதகம் ஏற்படாது என்று கூறினார்.

வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பான நீதிமன்ற விசாரணையின்போது, தமிழகஅரசு சீனியர் வழக்கறிஞர்களை வைத்து வாதாடவில்லை என அதிமுக குற்றம் சாட்டிய நிலையில், அன்புமணி ராமதாஸ் திமுக அரசுக்கு ஆதரவாக தரமான வழக்கறிஞர்களை வைத்துதான் வாதாடியது என கூறியிருப்பது பாமகவின் பச்சோந்தி தனத்தை மீண்டும் வெளிக்காட்டியுள்ளது.