பெங்களூரு:
பாமக இளைஞரணி தலைவரும், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் நெஞ்சுவலி காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று தர்மபுரிக்கு வந்த அவருக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், சில நிகழ்ச்சிகளை பாதியில் ரத்து செய்துவிட்டு தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்றார். பிறகு, மருத்துவர்களின் ஆலோசனைப்படி மேல் சிகிச்சைக்காக பெங்களூவில் உள்ள நாராயணா ஹிருதாலயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவர், முழு உடல் நலத்துடன் உள்ளதாக, அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Patrikai.com official YouTube Channel