சென்னை: பாமகவின் அமைதியான (கல்லெறி) போராட்டம் காரணமாக, பீச் – தாம்பரம் இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
வன்னியர்களுக்கு 20சதவிகித இடஒதுக்கீடு கோரி பாமக இன்றுமுதல் போராட்டத்தை அறிவித்துள்ளது. அமைதி போராட்டம் என்று அறிவித்த நிலையில், பாமகவினர், சாலைமறியல், வாகன மறியல், சாலை தடுப்புகளை அடித்து நொறுக்கி பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதுடன், சென்னையில் பல இடங்களில் மின்சார ரயில்கள் மீது கல்வீசு நடத்தப்பட்டது. இதனால், அதில் பயணம் செய்த பயணிகள் கடுமையாக அவதியடைந்தனர்.
கொரோனா அச்சுறுத்தல் காலமாக வாழ்வாதாரம் இழந்துள்ள அப்பாவி பொதுமக்கள் கடந்த சில நாட்களாகத்தான், வேலைகளுக்கு சென்று தங்களது அன்றாட வாழ்வினை கழித்து வருகின்றன. இந்த நிலையில், இன்று ரயில் மீது கற்களை வீசிய பாமகவினர் பாமகவினரின் போராட்டத்தால் சென்னை தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்லும் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பாமகவினர் போராட்டத்தால் ஏற்கனவே ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்துவதால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
(ராமதாஸ் கட்சியினருக்கு அமைதிவழி போராட்டம் என்றாலே, கல்லெறிவதும், சாலை தடுப்புகளை உடைப்பதும், மரங்களை வெட்டுவது போன்ற வன்முறைதான் போலும்)