உள்ளாட்சி தேர்தலில் பாமகவுக்குப் படுதோல்வி யைப் பரிசாகத் தந்த வாக்காளர்கள்
தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் 2 தென் மாவட்டங்களும், 7 வட மாவட்டங்களும் அடக்கம்!
இவற்றில், வட மாவட்டங்களில் பா. ம. க. பலமான கட்சி என்ற பிம்பம் கட்டமைக்கப் பட்டு இருந்தது!
சட்டமன்றத் தேர்தலில் அ. தி. மு. க. அணியில் இருந்த பா. ம. க. அங்கிருந்து விலகி, தனித்துப் போட்டியிட்டது!
அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது தேர்தல் பரப்புரையில், “அடுத்த ஆட்சி நம்முடையது தான்! அதற்கு முன்னோட்டம் இந்த உள்ளாட்சித் தேர்தல்கள்… வெற்றி உறுதி” என்று பேசினார்!
ஆனால், மக்கள் தேர்தலில் பா. ம. க. வுக்குப் படுதோல்வி யைப் பரிசாகத் தந்துள்ளார்கள்!
ஆனால் அக்கட்சியின் முக்கியப் பிரமுகரான வக்கீல் பாலுவோ, ” நாங்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளோம்” என்று கெத்து காட்டியுள்ளார்!
வாக்காளர்கள், மவுனப் புரட்சி செய்து விட்டு அமைதியாக சிரிக்கிறார்கள்!!
நன்றி : ஓவியர் இரா. பாரி