நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் தி.மு.க. தரப்பு அமோக வெற்றி பெற்றிருக்கிறது.
அதன் தோழமை கட்சிகளும் பெரும்பான்மையான இடங்களில் வென்றிருக்கிறது.
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ஜ.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து களம் கண்டன.
இதில் தர்மபுரி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 30 வார்டுகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
#தர்மபுரி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில்
பாமக அனைத்திலும் வெற்றி வாய்பினை இழந்தது
போட்டியிட்ட 30 வார்டுகளில்
24 வார்டுகளில் பாமக #வைப்பு_தொகை_இழந்துள்ளது.
PMK #lost_deposit in
24 wards out of the 30 wards contestedin #Dharmapuri municipality elections1/3 pic.twitter.com/WTzlpJYqzy
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) February 23, 2022
அனைத்து வார்டுகளிலும் தோல்வியைத் தழுவிய பா.ம.க. 24 வார்டுகளில் டெபாசிட் இழந்துள்ளது.
2021 சட்டமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. உடன் கூட்டணி அமைத்து தர்மபுரி சட்டமன்ற தொகுதியை வென்ற பா.ம.க. உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று டெபாசிட் இழந்துள்ளது கட்சி நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.