தைலாபுரம்: நாளை திட்டமிட்டப்படி புதுச்சேரியில் பா.ம.க சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர், தான் அன்புமணியுடன் எதுவும் பேசவில்லை என்று கூறினார்.
‘பொதுக்குழு ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்”பொதுக்குழு ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என்றும், புதுச்சேரி ‘சங்கமித்ரா அரங்கில் திட்டமிட்டபடி நாளை (ஆகஸ்ட் 17) பா.ம.க சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும், அதில் எந்த மாற்றமும் இல்லை’ என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமகவை கைப்பற்றுவதில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகஸ்டு 17ந்தேதி பாமக பொதுக்குழு கூடும் என்றும், அப்போது அன்புமணி உள்பட அவரது ஆதரவாளரை நீக்கி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார். ஆனால், பாமக தலைவர் அன்புமணி அதற்கு போட்டியாக, கடந்த 9ந்தேதி போட்டி பொதுக்குழு கூட்டி பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார்.
இதற்கிடையில், பாமக நிறுவனர் ராமதாசின் தைலாபுரம் தோட்டத்தில் அவரது மனைவி சரஸ்வதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்தினருடன் சென்று, தாயாரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த நிகழ்வில் ராமதாசும் உடனிருந்தார். இதனால், தந்தை மகன் சமரசம் ஆகிவிட்டதாக தகவல்கள் பரவின. மேலும் இதனால், ராமதாஸ் கூட்ட உள்ள பொதுக்குழு கூட்டம் ரத்தாகலாம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ராமதாஸ், திட்டமிட்டபடி நாளை (ஆகஸ்ட் 17) சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை 17.08.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பாண்டிச்சேரி அருகில் உள்ள சங்கமித்ரா அரங்கில் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சில விஷமிகள் வதந்தி பரப்புவதாக செய்தி வருகிறது. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். எனது தலைமையில் நாளை 17.08.2025 ஞாயிற்றுக்கிழமை பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. பொதுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டியவர்கள் அனைவரும் அவசியம் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அன்புமணி கட்டுப்பாட்டில் பாமக – ராமதாஸ் கூட்டியுள்ள பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் கிடையாது! பாமக பாலு