சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சி இன்று மதியம் 12 மணியளவில் தேர்தல் அறிக்கையை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ள பாமக, மக்களை கவரும் வகையில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிட இருப்பதாக அறிவித்து உள்ளது.
அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சி இன்று மதியம் 12 மணியளவில் தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளது. பாமக தேர்தல் அறிக்கையை, சென்னையில் ராமதாஸ், அன்புமணி, ஜி.மணி ஆகியோர் வெளியிடுகின்றனர்.
Patrikai.com official YouTube Channel