ராமதாஸ் - ஜி.கே.மணி
ராமதாஸ் – ஜி.கே.மணி

சென்னை:
ட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததை அடுத்து, மாவட்ட அளவில் அனைத்து மட்டங்களிலும் உள்ள பாமக நிர்வாக அமைப்பு கலைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
20-1466440607-pmkstatement
மாவட்ட அளவில் உள்ள அனைத்து ஒன்றிய, நகர மற்றும் பேரூர் பொறுப்பாளர்கள் அனைவரும் அவரவர் வகித்துவரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய மூன்று பேரைக் கொண்ட குழுவினர் ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் நேரில் வருகை தர உள்ளனர். தேர்வு நடைபெறும் இடம், தேதி போன்ற விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்” என்று  ஜி.கே. மணி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில்,  அந்த அறிக்கையில் பெறுநர் கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளதால் மற்ற மாவட்ட நிர்வாகிகளுக்கும் இது பொருந்துமா என்ற விவரம் அவரது அறிக்கையில் தெளிவாக விளக்கப்படவில்லை.