சென்னை
பாமக சார்பில் தர்மபுரியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்குப் பதில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார்.
பாமகவுக்கு பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதையொட்டி இன்று வேட்பாளர்கள் பட்டியலை பாமக வெளியிட்டது. அந்த பட்டியலில் தர்மபுரி தொகுதியில் அரசாங்கம் என்பவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது
தற்போது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தருமபுரி மக்களவைத் தொகுதியில் அரசாங்கம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது அவர் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாகப் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முனைவர் சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்படுகிறது.”
என்று கூறப்பட்டுள்ளது.
”பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தாமோ அல்லது தனது குடும்பத்தினரோ தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என முன்பு அறிவித்திருந்தார். பிறகு அவர் மகன் அன்புமணி தற்போது மருமகள் சவுமியா அன்புமணி ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனரர்”
என அரசியல் ஆர்வலர்கள் கூறி உள்ளனர்