சென்னை
வரும் 23 ஆம் தேதி முதல் பாமக சார்பில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன. எனவே திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகத் தேர்தல் பணிகளை நடத்தி வருகிறது. கடந்த டிசம்பர் முதல் திமுக சார்பில் பிரச்சாரம் நடந்து வருகிறது.
திமுகவுக்காக முக ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் தீவிரமாகத் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிமுக வில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாநிலம் எங்கும் சுற்றுப்பயணம் செய்து பிரச்ச்சரம் நடத்தி வருகிறார். கூட்டணி பேச்சு வார்த்தைகள் இன்னும் முடிவடையாமல் உள்ளன.
ஆயினும் அதிமுக, திமுக,மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் விருப்ப மனுத் தாக்கல் செய்ய அழைப்பு விடுத்தன. அவ்வகையில் பாமக வும் அழைப்பு விடுத்துள்ளது. வரும் பிப்ரவரி 23 முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் பாமக மண்டல அவ்வகலத்தில் 26 ஆம் தேதி வரை பெறப்பட உள்ளன.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.10000 கட்டணம் செலுத்த வேண்டும். இதைப் போல் தனித்தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.5000 செலுத்த வேண்டும் பெண்களுக்கான கட்டணம் அனைத்து தொகுதிகளுக்கும் ரூ.5000 ஆகும்.