
பொதுவாக, பா.ம.க. நிறுவனர் ராமதாசின் ட்விட்கள் பலராலும் கவனிக்கப்படும். தகவல்களின் அடிப்படையில் அவை இருப்பதோடு கிண்டலாகவும் இருக்கும்.
அதே நேரம் அவ்வப்போது அவரது பதிவுகள் கடுமையாக கிண்டலடிக்கப்படுவதும் உண்டு.
அப்படித்தான் இன்று ஆகிவிட்டது.

“ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு ரூ. 10 கோடி நிதி:
# தமிழக அரசின் உருப்படியான நடவடிக்கை. அன்புமணிக்கு வெற்றி”
– இவ்வாறு ராமதாஸ் ட்விட்டியிருந்தார்.
.இதற்கு ஓநாய் என்ற பெயர் வைத்திருக்கும் பதிவர் எழுதிய பின்னூட்டத்தில், “பீச் குதிரையும் பா.ம.க.வும் ஒன்னு.. எங்க சுத்துனாலும் அன்புமணிகிட்ட வந்து நின்னுடும்” என்று கிண்டலாக எழுதியுள்ளார்.
இவரது பின்னூட்டம் நெட்டிசன்களால் மிகவும் ரசிக்கப்பட்டு, பகிரப்பட்டு வருகிறது.
Patrikai.com official YouTube Channel