குஜராத் மாநிலம் மோர்பு பகுதியில் உள்ள மொச்சு ஆற்றின் மீது இருந்த தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 400 க்கும் அதிகமானோர் ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக சீரமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு இந்த பாலம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

சஹத் பூஜையை ஒட்டி ஆற்றில் நீராடும் விழா வட மாநிலங்களில் விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தொங்கு பாலத்தில் இருந்து 400க்கும் அதிகமானோர் ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

மாலை நேரமாக இருந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனை அடுத்து குஜராத் முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி மீட்பு பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்ததோடு தேசிய பேரிடர் மீட்பு குழுவை உடனடியாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த விபத்து குறித்து முழுமையான விவரம் இன்னும் வெளிவரவில்லை என்றபோதும் இதில் பலரின் நிலை மோசமாக உள்ளதாகவும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.