பார்வதி குண்ட்
பிரதமர் மோடி உத்தரகாண்டில் வழிபாடு செய்துள்ளார்.

பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநிலத்திற்குச் சென்று பிதோரகர் பகுதியில் 4,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதற்கு முன்னதாக, ஜோலிங்காங்கில் உள்ள பார்வதி குண்ட் பகுதிக்குச் சென்றார்.
அவர் பார்வதி குண்ட் கரையில் அமைந்துள்ள சிவன்-பார்வதி கோயிலில் பழங்குடியினரின் பாரம்பரிய உடையை அணிந்து, தலைப்பாகையுடன் உடுக்கை இசைத்து, சங்கு ஊதியும், ஆரத்தி பூஜையில் பங்கேற்றார். அப்போது பிரதமர் மோடியுடன் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் கலந்துகொண்டார்.
இந்த கோயில் அர்ச்சகர்களான வீரேந்தி குடியால் மற்றும் கோபால் சிங் ஆகியோர் பாரம்பரிய முறைப்படி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்., பிரதமர் மோடி ஜோலிங்காங்கில் உள்ள ஆதி கைலாஷ் சிகரத்தின் முன் கைகளைக் கட்டிக்கொண்டும் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.
இதன் மூலம் இந்தியா-சீனா எல்லையில் உள்ள ஆதி கைலாஷ் மலைக்குச் சென்ற நாட்டின் முதல் பிரதமர் மோடி எனப் புகழ் பெற்றுள்ளார்.
[youtube-feed feed=1]