ராமநாதபுரம்: புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி மார்ச் மாதம் போக்குவரத்துக்காக திறந்து வைக்கிறார் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்து உள்ளார்.
பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மார்ச் மாதத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளதுடன், பிரதமர் மோடி பாம்பன் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்தை தொடங்கி வைக்க உள்ளார் என கூறியுள்ளார்.
ராமேஸ்வரத்தில் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் கடந்து செல்லும்போது திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த பால பணிகள் முடிவடைந்துவிடடதையடுத்து ரயில்வே அதிகாரிகள் பல்வேறு கட்ட ஆய்வுகள் மேற்கொண்டனர். மேலும், சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப் பட்டது. இதையடுத்து, பாம்பன் பாலம் திறப்பு – ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு வர உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. பின்னர் பாலத்தில் சில பிரச்சினைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதை பயன்பாட்டுக்கு திறப்பதில் தாமம் ஏற்பட்டது.
இந்த நிலையில், பாம்பன் புதிய ரயில் பாலத்iத பிரதமர் மோடி மார்ச் மாதத்தில் திறந்து வைக்க உள்ளதாகவும், அது முதல் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.