ராமேஸ்வரம்

பிரதமர் மோடி புதிய பாம்பன் ரயில் நிலையத்தை திறந்து வைக்க ராமேஸ்வரம் வந்துள்ளார்.

இன்றி இலங்கையில் உள்ள அனுராதபுரத்தில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மண்டபம் வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் பாம்பன் பாலத்தில் மையப்பகுதியில் போடப்பட்டுள்ள மேடைக்கு வந்தார்.

அவர் அப்போது தமிழக பாராம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்தார். மேடையில் இருந்து புதிய ரெயில் பாலத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதனைத் தொடர்ந்து, பாம்பனில் இருந்து ராமேசுவரத்துக்கு ரெயில்வே பணியாளர்கள், பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு முதல் ரயில் பாம்பன் ரெயில் பாலத்தில் சென்றது.

இன்று ஸ்ரீராம நவமி என்பதால் ராமேஸ்வரம், ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு செய்து சிறிது நேரம் தரையில் அமர்ந்து சாமி தரிசனம் செய்தார்.. பிரதமர் மோடிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கும் விழாவுக்கு பிரதமர் மோடி சென்றார்.