புதுச்சேரி: சட்டசபை தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரதமர் மோடி வரும் 30ம் தேதி புதுச்சேரி வருகிறார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி நேற்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து, அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி வரும் 30ம் தேதி புதுச்சேரி வரவுள்ளார்.
அங்கு ஏ.எப்.டி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்படும் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி புதுச்சேரி மாநில பாஜகவினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel