புதுடெல்லி:
பிப்ரவரி 22-ம் தேதி பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருது தென் கொரியாவில் வழங்கப்படுகிறது.
பிரதமர் 2 நாள் பயணமாக பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தென் கொரியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். தேர்தல் நெருங்குவதால், இதுவே பிரதமரின் கடைசி வெளிநாட்டுப் பயணம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு சியோல் அமைதி விருதை கொடுப்பது குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் சியோல் அமைதிப் பரிசு கலாச்சார அமைப்பால் அறிவிக்கப்பட்டது.
மோடிக்கு அமைதி பரிசு கொடுப்பதற்கு எதிர்ப்பு 20-க்கும் மேற்பட்ட கொரியர்கள் போராட்டம் நடத்தினர். மோடி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது, குஜராத் கலவரம் நடந்ததை நினைவுபடுத்திய அவர்கள், மோடிக்கு அமைதி பரிசு தரும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், பிப்ரவரி 22-ம் தேதி சியோல் அமைதிப் பரிசு பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது.
இந்திய-கொரிய தொழிற்துறை அமைப்பிலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.