டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று  பிரதமர் மோடி தலைமையில் 9-வது நிதி கூட்டம் ஆயோக் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தி திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் புறக்கணித்து உள்ளனர்.  மொத்தம் 6 மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

நாடு முழுதும் உள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக  நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. பிரதமர் தலைமையிலான இந்த குழுவில், அனைத்து மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த அமைப்பானது மத்திய அரசின் கொள்கைகளை  வடிவமைக்கிறது. மேலும் வலுவான மாநிலங்கள் வலுவான தேசத்தை உருவாக்குகின்றன என்பதை உணர்ந்து, தொடர்ச்சி யான அடிப்படையில் மாநிலங்களுடனான கட்டமைக்கப்பட்ட ஆதரவு முயற்சிகள் மற்றும் வழிமுறைகள் மூலம் கூட்டுறவு கூட்டாட்சியை வளர்ப்பது. மாநிலங்களின் தீவிர ஈடுபாட்டுடன் தேசிய வளர்ச்சி முன்னுரிமைகள், துறைகள் மற்றும் உத்திகள் பற்றிய பகிரப்பட்ட பார்வையை உருவாக்குதல்.

கிராம மட்டத்தில் நம்பகமான திட்டங்களை உருவாக்குவதற்கான வழிமுறைகளை உருவாக்குதல் மற்றும் அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் படிப்படியாக ஒருங்கிணைத்தல் பொருளாதார மூலோபாயம் மற்றும் கொள்கையில் தேசிய பாதுகாப்பின் நலன்கள் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய, குறிப்பாக குறிப்பிடப்பட்ட பகுதிகளில். பொருளாதார முன்னேற்றத்தில் இருந்து போதுமான பலன் கிடைக்காமல் ஆபத்தில் இருக்கும் நமது சமூகத்தின் பிரிவுகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துதல். மூலோபாய மற்றும் நீண்ட கால கொள்கை மற்றும் நிரல் கட்டமைப்புகள் மற்றும் முன்முயற்சிகளை வடிவமைக்கவும், அவற்றின் முன்னேற்றம் மற்றும் அவற்றின் செயல்திறனை கண்காணிக்கவும். கண்காணிப்பு மற்றும் பின்னூட்டம் மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள், தேவையான இடைப்பட்ட திருத்தங்கள் உட்பட புதுமையான மேம்பாடுகளைச் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

நடப்பாண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் இன்று  பிரதமர் மோடி தலைமையில் ராஷ்டிரபதி பவன் கலாச்சார மையத்தில் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பு ஏற்கனவே மாநில முதல்வர்களுக்கு விடுக்கப்பட்டது. இதை ஏற்று பெரும்பாலான முதல்வர்கள் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு தேவையான நிதி ஒதுக்காததால்,  திமுக உள்பட பல மாநிலங்களில் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.  இண்டியா கூட்டணி கட்சிகள், ஆளும் மாநில முதல்வர்கள், நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

அதாவது, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப் மற்றும் புதுவை முதல்வர் ரங்கசாமியும் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

இந்த பரபரப்பான சூழலில், பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம், டில்லியில் இன்று துவங்கியது. இந்த கூட்டத்தில்  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  உள்துறை அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ., மற்றும் அக்கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

வளர்ந்த பாரதம் மற்றும் அதில் மாநிலங்களின் பங்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.