சென்னை; முதலமைச்சரின் உடல்நலம் குறித்து தொலைபேசியில் விசாரித்த பிரதமர் மோடியிடம், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள வரும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல் நலம் குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் நலம் விசாரித்தார். அப்போது, சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்த்துளார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்க விழா வரும் 28ந்தேதி தொடங்க உள்ளது. இந்த தொடக்க விழாவுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அழைக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால், டெல்லி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தன்னிடம் உடல்நலம் குறித்து தொலைபேசியில் விசாரித்த பிரதமர் மோடியிடம், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.