டெல்லி: “நவீன இந்தியாவின் சிற்பி”  என போற்றப்படும்  இந்தியாவின் முதல் பிரதமர்  மறைந்த ஜவகர்லால் நேருவின் 136வரது  பிறந்தநாள் இன்று. இன்றைய தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில்  பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

 “ரோஜாவின் ராஜா” என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்வர் மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு. த னது சட்டையில், பொத்தானுக்கு அருகே தினமும் ஒரு ரோஜா மலரை விரும்பி அணிந்து வரும் பழக்கம் கொண்டிருந்ததால், நேரு “ரோஜாவின் ராஜா” என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.  குழந்தைகள் மீது அவர் வைத்திருந்த பாசத்தின் காரணமாகவும்,  குழந்தைகளுடன் நேரத்ரதை செலவிடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால், அவர் பிறந்ந தினம் குழந்தைகள் தினமாக  கொண்டாடப்பட்டு வருகிற்து.

இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய தேசிய தலைவர்களில் முக்கியமானவர், பண்டிட் ஜவகர்லால் நேரு.  நாட்டின்  விடுதலைக்காக ஒத்துழையாமை இயக்கம் (non-cooperation movement) உட்பட பல போராட்டங்களில் கலந்து கொண்டு சுமார் 8 வருட காலம் (3052 நாட்கள்) சிறை சென்றவர். இந்தியாவுக்கு விடுதலை கிடைத்ததும், நாட்டின் முதல் பிரதமராக தேர்வானவர்  நேரு.

நேருவின் தனது பதவி காலத்தில் ராணுவம், வெளியுறவுத்துறை, நிதி உள்ளிட்ட முக்கிய துறைகளை கைவசம் வைத்திருந்து திறம்பட கையாண்டவர். “வேற்றுமையில் ஒற்றுமை” (university in diversity) எனும் கோட்பாட்டில் மிகவும் நம்பிக்கை கொண்டிருந்தவ. நாடு முழுவதும் ஏராளமான தொழிற்காலை அமைப்பதில் தீவிரம் காட்டியவர், அதனால், “நவீன இந்தியாவின் சிற்பி” (architect of modern India) என அழைக்கப்பட்டார்.

தொழிற்சாலைகளை அமைப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இன்று நாட்டில் பல்வேறு மாநிலங்களில் நிலைத்திருக்கும் பல தொழிற்சாலைகள் நேருவின் முயற்சியால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. தசுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக 1947ல் பதவி ஏற்ற நேரு, தனது பதவிக்காலத்திலேயே,1964 மே 27 அன்று மறைந்தார்.

அவரது பிறந்த தினமான நவம்பர் 14, ஒவ்வொரு வருடமும் “தேசிய குழந்தைகள் தினம்” (National Children’s Day) என நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இன்று நேருவின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி,  முன்னாள் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவின் நினைவிடத்தில் அஞ்சலி செலத்தினார். இதையடுத்து,  பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், முன்னாள் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.