டெல்லி : தமிழ்நாட்டில் புதிதாக  தொடங்கப்பட உள்ள 11 புதிய மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், தமிழ்நாட்டில் புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கான அனுமதி பெறப்பட்டது. அதைத்தொடர்ந்து, பல மருத்துவக்கல்லூரிகள் ஏற்கனவே பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், புதிதாக கட்டப்பட்டு வந்த,  விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர் , ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 11  மாவட்டங்களில் உள்ள புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

காணொளி காட்சி மூலம் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டிற்கு மேலும், 1,450 இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது  19 மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் 22076 இடங்களும், சுய நிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 13,832 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.