நடிகை த்ரிஷா கொரோனாவில் இருந்து குணமடைந்ததாக பதிவிட்டுள்ளார்.

ஓமைக்ரான் தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், திரை பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு கொரோனா உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார் நடிகை த்ரிஷா.

தற்போது மீண்டும் பரிசோதனை செய்ததில் ‘நெகடிவ்’ என்று வந்திருப்பது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.