பிரக்யாராஜ்: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாகும்பமேளாவையொட்டி, திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி இன்று புனித நீராடினார்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகா கும்பமேளா உ.பி. மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் (ஜனவரி 2025)  13ஆம் தேதி தொடங்கியது. சுமார் 45 நாட்கள் நடைபெறும் இந்த  மகா கும்பமேளா வரும் பிப்ரவரி  26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கும்பமேளாவையொட்டி,   கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை  பிரதமர் மோடி,  பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில்  புனித நீராடினார்.  முன்னதாக,  உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன், கங்கை ஆற்றில் படகில் பயணம் செய்த பிரதமர் மோடி, புனித நீராடி, கங்கைக்கு ஆரத்தி காட்டி வழிபாடுகளையும் மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து பிரதமர், பிரதமர் கும்பமேளா நிகழ்ச்சிக்கு வந்துள்ள  துறவிகளைச் சந்தித்து உரையாடினார். மேலும் கும்பமேளாவில் பாதுகாப்பு  ஏற்பாடுகளை மதிப்பாய்வு செய்தார்.  பிரதமர் வருகையை முன்னிட்டு பிரயாக்ராஜ் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான மக்களைப் போல நானும் பக்தி உணர்வால் நிறைந்தேன் என்று  குறிப்பிட்டுள்ளார்.

உலக சாதனை? மகா கும்பமேளாவில் இதுவரை 34 கோடி பக்தர்கள்  நீராடல்!