போராடும் விவசாயிகளிடம் நேருக்கு நேர் பேசும் தைரியம் மோடிக்கு இல்லை: ஆதீா் ரஞ்சன் சவுத்ரி

Must read

டெல்லி: போராடும் விவசாயிகளிடம் நேருக்கு நேர் பேசும் தைரியம் மோடிக்கு இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதீா் ரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டி உள்ளார்.

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகிறது. போராட்டம் 30வது நாளை எட்டி உள்ள நிலையில் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

இந் நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதீா் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகளிடம் நேருக்கு நேர் பேசும் தைரியம் மோடிக்கு இல்லை.

ஆனால், விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் நேரடியாக வழங்கப்படும் என மத்திய அரசு கூறுகின்றது. முழுத் தொகையும் விவசாயிகளுக்கு போகாது. ஏனெனில் இன்னும் இடைத்தரகர்கள் உள்ளனர். ஆகவே இந்த தொகை விவசாயிகளுக்கு சென்று சேராது என விமர்சித்து உள்ளார்.

More articles

Latest article