டில்லி

ரும் 22 ஆம் தேதி டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோ  பைடனை சந்திக்க உள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி இந்தியப் பிரதமராகப் பதவி ஏற்றுள்ளார்.  அப்போது முதல் 2019ஆம் ஆண்டு வரை அவர் சுமார் 96 வெளிநாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்.   அதாவது 2014 ஆம் ஆண்டு 9 நாடுகள், 2015 ஆம் ஆண்டு 23 நாடுகள், 2016 ஆம் ஆண்டு 17 நாடுகள் 2017 ஆம் ஆண்டு 14 நாடுகள், 2018 ஆம் ஆண்டு 23 நாடுகள் மற்றும் 2019 ஆண்டு  15 நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளார்.

இடையில் 2020ஆம் ஆண்டு மட்டும் அவர் எந்த வெளிநாட்டுக்கும் பயணம் செய்யவில்லை.  மோடி இதுவரை 1 முறை 35 நாடுகளுக்கும், 2 முறை 15 நாடுகளுக்கும், 3 முறை 2 நாடுகளுக்கும், 4 முறை 4 நாடுகளுக்கும், 5 முறை 3 நாடுகளுக்கும், 6 முறை 1 நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த வருடம் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி டில்லியில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அங்கு அவர் 23 ஆம் தேதி  அன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேச உள்ளார்.  அப்போது இருவரும் ஆப்கானிஸ்தான், சீனா குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.  பிறகு 24ஆம் தேதி அவர் ஜப்பான், ஆஸ்திரிய நாட்டு தலைவர்களைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]