ஜோகன்னஸ்பர்க்

ன்று தென் ஆப்ரிக்காவில் தொடங்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இன்று பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.

இந்த மாநாடு கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாகக் காணொலி காட்சி மூலம் நடந்து வந்தது.  இந்த ஆண்டு  நேரடி நிகழ்வாக மாநாடு நடைபெறுகிறது. பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்க தென் ஆப்ரிக்க அதிபர் சிறில் ரமாபோசா அழைப்பு விடுத்து இருந்தார்.

அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இன்று காலையில் தென் ஆப்ரிக்கா புறப்படுகிறார். மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் அதிபர் உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

தவிரபல்வேறுஆப்பிரிக்கநாடுகள்மற்றும்வங்காள தேசம், இந்தோனேஷியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில்  சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்கிறார்கள்.  இந்த மாநாடு 24-ந்தேதிவரை 3 நாட்கள்நடைபெறுகிறது.

இந்த உச்சி மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.  இதில் குறிப்பாக உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் பொது கரன்சி உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.