டில்லி
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய நிலையில் இது குறித்து பிரதமர் மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆப்கானிஸ்தான் தற்போது முழுவதுமாக தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. மத அடிப்படை வாதம் மற்றும் தீவிரவாத சித்தாந்தங்களில் தாலிபான்கள் மிகவும் நம்பிக்கை கொண்டவர்கள் என்பதை உலக மக்கள் நன்கு அறிவார்கள் என்பதால் இனி ஆப்கானிஸ்தான் நிலை குறித்து உலகநாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.
ஆப்கானில் புதிய அரசை அமைக்கத் தாலிபான்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளன. ஆப்கானில் புதிய தலைவர் பதவிக்குத் தாலிபான் தலைவரான முல்லா அப்துல் கனி பரதர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது தோகாவில் உள்ள அவர் விரைவில் காபூலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சீனா, ரஷ்யா, துருக்கி, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தாலிபான் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின் கென் ஆலோசனை நடத்தி உள்ளார். தற்போது டில்லியில் பாதுகாப்புக்கான மூத்த அமைச்சர்கள் குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி வருகிறார்.
தற்போது நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்த்ஹில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் பங்கேற்றுள்ளனர்.
[youtube-feed feed=1]