புதுடெல்லி:
இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை, பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார்.

ராஷ்டிரபதி பவனில் இரு தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது இருவரும் சமீபத்திய அரசியல் நிகழ்வுகள், அரசு திட்டங்கள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்வெளியாகி உள்ளது.
குடியரசுத் தலைவர் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, லடாக் லெப்டினன்ட் கவர்னர் பிரிகேடியர் டாக்டர் பி.டி. மிஸ்ரா மற்றும் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவையும் சந்தித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் வியாழக்கிழமை பஞ்சாப் சென்றார். அங்கு அவர் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் தரிசனம் செய்து, நாட்டின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்தார்.
Patrikai.com official YouTube Channel