
சென்னை:
அடுத்த மாதம் (ஏப்ரல்) 11ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அருகே உ நடைபெற உள்ள ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதாக கூறப்படுகிறது.
சென்னை அருகே கிழக்கு கடற்கரைசாலையிலுள்ள திருவிடந்தை பகுதியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் சார்பில் ராணுவ கண்காட்சி நடைபெற உள்ளது. 4 நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சி அடுத்த மாதம் 11ந்தேதி தொடங்குகிறது. இந்த கண்காட்சியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி 11ந்தேதி தமிழகம் வருகிறார்.
இவ்விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel