பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன. 19ம் தேதி முதல் இணையதளத்திலும், 21ம் தேதி முதல் பள்ளிகளிலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கும் என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
images
நாளை காலை வெளியிடப்படுகின்றன. தேர்வர்களின் பிறந்த தேதி மற்றும் பதிவு எண் மூலம், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 23ம் தேதி வெளியாகும் என தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகள், தனியார் பள்ளிகளில், சி.பி.எஸ்.இ., பாடப்பிரிவில், பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.