சென்னை: தமிழ்நாட்டில்  10வது, 12வது வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி உள்ள நிலையில், தேரவு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஜூன் 2-ம் தேதி தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நேரடித்தேர்வுகள் நடைபெறாத நிலையில், இந்த வருடம் குறைந்த பாடத்திட்டத்தில், தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ஏப்ரல் 5ந்தேதி முதல் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்து வதற்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று 12ம் வகுப்பு தேர்வு தொடங்கிய நிலையில், இன்று  10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், 11ம் வகுப்புக்கு மாதம் இறுதியில் பொதுத்தேர்வு தொடங்குகிறது.

இத்ந நிலையில்,  12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஜூன் 2-ம் தேதி தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.