சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 11ஆம் வகுப்பு (பிளஸ்-1) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த ஆண்டு 95% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்புக்கு நடந்த முதல் பொதுத்தேர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவ மாணவிகள் தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணையதளங்களில் பார்வையிடலாம்.
தமிழக அரசின் இந்த அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறப்பு தேதி ஆகியவற்றை அளித்து முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் இந்த தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள முடியும்.
அதேபோல் மாணவர்கள் தங்கள் பள்ளியிலும், கல்வித்துறை அலுவலகத்திலும் இந்த முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.
மாணவர்களின் செல்போன் எண்களுக்கும் மதிப்பெண்கள் விவரம் உடனடியாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவர்கள் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இவர்களின் 95% பேர் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். அவர்களில், 93.3% மாணவர்கள் தேர்ச்சி, 96.5% மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாநில அளவில் 98% தேர்ச்சியுடன் ஈரோடு முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு பிளஸ்1-ல் 91.3% தேர்ச்சி அடைந்திருநத நிலையில், இந்த ஆண்டு 95% தேர்ச்சி அடைந்துள்ளனர்.