சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்கள், அதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழை இன்று (ஜூலை 31) முதல் தாங்கள் பயின்றி பள்ளிகளில் பெறலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரலில் நடைபெற்று முடிந்தது. அதைத்தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியாகி, மாணாவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களுடன் உயர்கல்வியில் சேர்ந்து படித்து வரும் நிலையில், இன்று பிளஸ்-2 அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச்/ஏப்ரல் 2023, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட) பிளஸ் 1, பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள்/ மதிப்பெண் பட்டியல் ஜூலை 31ம் தேதி முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள் ப்யின்ற பள்ளி வாயிலாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை/ மதிப்பெண் பட்டியலினை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.