சென்னை:
ஜூலை மாதம் முதல் வாரத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி முதல் பிளஸ்2 தேர்வு தொடங்கி கடைசி நாளான மார்ச் 24ந்தேதியுடன் முவடைந்தது. அதேபோல பிளஸ் 1 தேர்வுகள் 26-ம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால், கொரோனா தடுப்பு ஊரடங்கு மார்ச் 24ந்தேதி முதல் அமல்படுத்தியதால், பிள12 கடைசி தேர்வை பெரும்பாலான மாணவ மாணவிகள் எழுத முடியாத நிலை ஏற்பட்டது. அதுபோல 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைத்துள்ள தமிழக அரசு, தற்போது அதை முழுவதுமாக ரத்து செய்து விட்டனது.
இதையடுத்து, 12-ஆம் வகுப்பு தேர்வு தாள்களை திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தகவல் பரவி வந்தன.
இந்த நிலையில், இன்று செய்தியளார்களிடம் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் , ஜூலை மாதம் முதல் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றார்.
கொரோனா காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதமாகி உள்ளது. இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும், மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. சூழ்நிலையைப் பொறுத்து பருவத்தேர்வு ரத்து செய்யப்படும்.
தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.