சென்னை:

ன்று பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த மாவட்டத்தில் 97.85 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மாநிலம் முழுவதும் 40 சதவிகிதம் பேர் 700 மதிப்பெண்களுக்கு கீழேயும், அதேவேளையில் 231 மாணவ மாணவிகள் 1200க்கு 1180 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 181 மாணவிகளும், 50 மாணவர்களும் அடங்கும்.

மேலும் பாடவாரியாக தேர்ச்சி பெற்ற விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இயற்பியலில 96.2 சதவிகிதமும், வேதியியலில் 95சதவிகிதமும், கணிதத்தில் 96.4 சதவிகிதமும், தாவரவியலில 93.9 சதவிகிதமும், விலங்கியலில்91.3 கதவிகிதமும், வணிகவியலில் 91.3 சதவிகிதமும், கம்ப்யூட்டர் சயின்சில் 96.1 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாடவாரியாக தேர்ச்சி விகிதம் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையும், தேர்ச்சி விகிதமும் (அடைப்புக்குறியீட்டுக்குள்)  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொழிப்பாடம்  – 833319 (96. 85 %), ஆங்கிலம் – 834370 (96.97%) , இயற்பியல் – 834370 (96.44%) , வேதியியல் – 517419 (95.02%) , உயிரியல் – 298010 (96.34%), தாவரவியல் – 79039 (93.96%), விலங்கியல் – 77384 (91.99%) , புள்ளியியல்- 7505 (98.31%), கணிப்பொறி அறிவியல் – 305899 (96.14%) , புவியியல் – 13862 (99.21%), நுண் உயிரியல் – 1328 (98.96%), உயிர் வேதியியல் – 535 (98.53%), நர்சிங் – 4841 (97.86%), நியூட்ரிசியன் மற்றும் டையடிக்ஸ் – 1486 (99.87%), கம்யூனிகேட்டிவ் இங்கிலீஸ் – 769 (98.09%), கணிதம் – 422775 (96.19%) ஹோம் சயின்ஸ் – 3651 (99.78%) , வரலாறு – 72389 (89.19%), பொருளியல் – 231050 (90.94%), பொருளாதார அரசியல் – 5788 (89.57%) , வணிகவியல் – 245467 (90.31%), கணக்கு பதிவியியல் – 225508 (91.02%) , இந்திய கலாசாரம் – 883 (96.08%), அட்வான்ஸ்ட் மொழிப்பாடம் – 3794 (91.89%), வணிக கணிதம் – 37353 (95.99% ) 

மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு பட்டியல் விவரம்:

700 க்கும் கீழ் பெற்றவர்கள் – 3,47,938

800 மதிப்பெண் பெற்றவர்கள் – 1,65,425

900 மதிப்பெண் பெற்றவர்கள் – 1,43,110

1000 மதிப்பெண் பெற்றவர்கள் – 1,07,266

1100 மதிப்பெண் பெற்றவர்கள் – 71,368

1125 மதிப்பெண் பெற்றவர்கள் – 11,739

1126 – 1150 மதிப்பெண் பெற்றவர்கள் – 8,510

1151 – 1180 மதிப்பெண் பெற்றவர்கள் – 4847

1180 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் – 231 

மேலே உள்ள விவரங்கள் தேர்வுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.