சென்னை:
தமிழகத்தில் பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணி மே1ந்தேதி தொடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 24ந்தேதியில் இருந்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்க மே 3ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஊரடங்க முடிந்ததும் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதியுடன் பிளஸ் 2 தேர்வு முடிவடைந்த நிலையில், அந்த தேர்வுத்தாள்கள் இதுவரை திருத்தப்படவில்லை. கடந்த 22ம் தேதியே விடைத்தாள் திருத்தம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் விடைத்தாள் திருத்தும் பணி தடைபட்டது.
இதை யடுத்து, வரும் மே 1ந்தேதி விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விவாதித்து வருகின்றனர். அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும், சமூக விலகள் கடைபிடித்து தேர்வுத்தாள் திருத்தும் பணி விரைவில் தொடங்கும் என கல்வித்துறை வட்டாரங்களில் செய்திகள் கசிந்து வருகின்றன.
அதேவேளையில், தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் வருவார்களாக என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது.
மே 3ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தகவல்கள் பரவி வரும் நிலையில், பிளஸ்2 விடைத்தாள் திருத்தும் பணியும் எப்போது தொடங்கும் என மாணவ மாணவிகள் உள்பட அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.