சென்னை:
பிளஸ்1 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த ஆண்டு முதன்முறையாக பிளஸ்1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. மேலும், பொதுத்தேர்வில் பெயிலானவர்கள், தொடர்ந்து பிளஸ்2 படிக்கலாம் என்றும், தவறிய பாடங்களை திரும்பு எழுதி தேர்ச்சி பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று வெளியான தேர்வு முடிவுகளில், எத்தனை மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்கள் என்பது குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
500 மதிப்பெண்ணுக்கு மேல் வாங்கியவர்கள் – 30,380 பேர்
451 – 500 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 64,817 பேர்
426 – 450 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 48,560 பேர்
401 – 425 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 61,369 பேர்
351 – 400 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 1,60,581 பேர்
அதுபோல பாட வாரியாக தேர்வு பெற்றவர்கள் எத்தனை சதவிகிதம் பேர் என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
இயற்பியல் – 93 %
வேதியல் – 92.7%
உயிரியல் – 92.6%
தாவரவியல் – 89.3%
விலங்கியல் -91.8%
கணிதம் – 92.5%
கணினி அறிவியல் – 95.3%
பிள்ஸ்1 பொதுத்தேர்வில், பிளஸ்2 தேர்வை போலவே, 97.3 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் 89.35 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் மாணவர்கள் 89.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாணவிகள் 93.22 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் 62 ஆண் கைதிகள் பிளஸ் 1 தேர்வெழுதினர். இவர்களில் 45 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.